பிப்ரவரி 2014 - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

முருகன் தகவல்கள்

PM 11:42
முருகன் தகவல்கள்

1.முருகனின் திருவுருவங்கள்:

1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
 3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
 8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
 14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.

 2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

 3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

 4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

 5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

 6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

 7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

 8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

 9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:
 1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
 8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

 10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

 11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

 12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

 13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

 14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

 15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

 16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

 17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

 18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

 19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

 20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

 21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

 22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

 23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

 24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

 25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

 26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

 27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

 28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

 29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

 30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

 31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

 32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

 33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

 34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

 35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

 36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

 37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

 38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

 39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

 40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

 41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

 42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

 43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

 44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார். 


45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

 46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.

 47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

 48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

49. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

 50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

 51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

 52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

 53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

 54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

 55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

 56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

 57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

 58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

 59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

 60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.


thanks to http://www.eegarai.net/t73516-60

முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

PM 11:32
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். சரவண பவன் சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர். சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள். ஆறுமுகம் சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு. குகன் மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன். குமாரன் கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள். கந்தன் கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள். விசாகன் விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள். வேலன் வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான். குருநாதன் பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார். சுப்பிரமணியம் சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது. வேறு சில பெயர்கள் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கந்தனின் 16 நாமங்கள்

PM 11:22
கந்தனின் 16 நாமங்கள்

சிவ-பார்வதி தம்பதி களுக்கு இரு புதல்வர்கள். இருவருமே பெற்றோரை மிஞ்சிய புதல்வர்களாக புராணங்களில் புகழப்படு கின்றனர். சீதாராமனுக்கு லவன், குசன் என்று இரு புதல் வர்கள். அவர்கள் ராம னையே எதிர்த்துப் போர் புரிந்தனர். அவர்கள் கூறும் தனது சுயசரித ராமாயணத்தை ராம பிரானே விரும்பிக் கேட்டார். என்றாலும் லவ குசர்கள் தகப்பனாரை விஞ்சவில்லை. கிருஷ்ண னுக்கு பல பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் யாரும் கண்ணனை மிஞ்சியதாகப் புராண மில்லை. பிரம்மாவுக்கும் நிறைய மானச புத்திரர்கள் உண்டு. நாரதரும் அவர் புதல்வர்தான். ஏன், பிரம்மனே மகாவிஷ்ணுவின் புதல்வர்தான். அவர் மகாவிஷ்ணுவைவிட உயர்ந்தவர் என்று கூறமாட்டோம். நாரதரை எந்த புராணத்தில் கண்டாலும், தகப்பன் பிரம்மனைவிட உயர்ந்தவர் என்று கூறமாட்டோம். ஆனால் சிவ- பார்வதி புத்திரர்களான கணபதி, கந்தன் இருவருமே ஷண்மதத்தில் ஒருவராக உயர்த்தப்பட்டுள்ளனர். கணபதியை வணங்காது சிவ- பார்வதிகூட இயங்க முடியாது. அது கணபதிக்கு சிவன் தந்த வரம். ஒருசமயம், சிவனே அந்த விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போயிற்று. அதனால் நிகழ்ந்ததை, "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா' என்று அருணகிரிநாதர் பாடுகிறார். திரிபுராசுரனை வதைக்க தேர் ஏறிச் சென்றபோது சிவபெருமான் கணபதியை வணங்காமல் சென்றார். அதனால் சிவனது ரத அச்சு முறிந்த தாம். இது நடந்த இடம் அச்சிறுபாக்கம்- சென்னை அருகில் உள்ளது. லலிதா ஸஹஸ்ர நாமம், "காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஸ்வரா மஹாகணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா பண்டாசுரேந்த்ர நிர்முக்த ஸஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷினி' என்று கூறுகிறது. அதாவது, பண்டாசுர வதத்திற்கு லலிதை, விக்ன யந்திரத்தை உடைக்க கணபதியை நினைக்க வேண்டியதாயிற்று. வைகாசி விசாகம் இவ்வருடம் 3-6-2012 அன்று வருகிறது. வைகாசி விசாகப் பெருமை என்ன? பரமேஸ்வரனிடம் வரம்பெற்ற சூரபத் மாதியர்களை பிரம்மா, விஷ்ணுவால் அழிக்க முடியாது. எனவே சிவனே மறுவுருவமாக- சிவஜோதியே ஸ்கந்தனாக, ஷண்முகனாக, கார்த்திகேயனாக, சரவணபவனாக, குமரனாக வைகாசி விசாக தினத்தில் அவதரிக்க வேண்டியதாயிற்று. ஸ்கந்த அவதார லீலைகளை வியாசரின் ஸ்காந்தம் என்னும் புராணம் விவரமாகக் கூறும். மற்ற புராணங்களிலும், மகாபாரதம், ராமாயணத்திலும் கந்தனின் லீலா பராக்ரமங்களைக் காணலாம். 17 புராணங்களும் சேர்ந்து மூன்று லட்சம் சுலோகங்கள் கொண்டவை என்றால், ஸ்காந்தம் மட்டும் ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. வியாசரால் நைமிசாரண்யத்தில் கூறப்பட்டது. சிவ ரஹஸ்ய காண்டம் 13,000 சுலோகங்கள், ஏழு காண்டங்கள் உள்ளன. சிவகுருநாதன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று சிவப்புதல்வன் புகழப்பட்டுள் ளான். காரணம் என்ன? "வேதத்தை ஆதாரமாகக் கொண்டு சிருஷ்டி செய்கிறேன்' என்று அகம் பாவத்துடன் கூறிய பிரம்மனிடம், "வேதத்தைக் கூறும்' என்றான் முருகன். பிரம்மன், "ஓம்' என்று ஆரம்பிக்க, "நிறுத்தும்; ஓம் என்றீரே. அதன் பொருள் என்ன?' என்று கேட்டான். பதில் கூறமுடியாமல் திணறிய பிரம்மனின் தலையில் குட்டி, சிறையில் அடைத்து, சிருஷ்டி தொழிலை தானே மேற்கொண்டான் கந்தன். சிவபெருமான், "ஓம் என்னும் பிரணவப் பொருளை நீ அறிவாயோ' எனறு கந்தனைக் கேட்க, "உபதேசம் கேட்கும் முறையில் கேட்டால் உரைப்போம்' என்று கூற, சிவனும் பணிந்து கேட்க, சிவகுமாரன் சிவகுருநாதனா னான் அல்லவா! தகப்பனையே மிஞ்சிய புதல்வன் ஆனான் கந்தன். வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார். "ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம் ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா த்விதியோ ஸ்கந்த ஏவச அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத் பாஹுலேய: சதுர்த்தக: காங்கேய: பஞ்சமோ வித்யாத் ஷஷ்ட: சரவணோத்பவ: ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத் குமாரஸ்யாத் அத அஷ்டக: நவம: ஷண்முகஸ்சைவ தஸம: குக்குடத்வஜ: ஏகாதச: சக்திதர: குஹோ த்வாதச ஏவச த்ரயோதஸோ ப்ரம்மசாரி ஷாண்மாதுர: சதுர்தச: க்ரௌஞ்சபித் பஞ்சதசக: ஷோடஸ: சிகிவாஹன:' முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார். கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன். 1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன். 2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன். 3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன். 4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன். 5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன். 6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்). 7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன். 8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன். 9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன். (அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்). 10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது. 11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்). 12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர். (லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன். யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன். அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.) 13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன். 14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன். 15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன். 16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான். மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார். "ஏதத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக் ஸதாதரம் விவாஹே துர்கமே மார்கே துர்ஜயே சததைவ ச கவித்வே ச மஹாஸாஸ்த்ரே விக்ஞானார்த்தி பலம் லபேத் கன்யார்த்தி லபதே கன்யாம் ஜயார்த்தி லபதே ஜயம் புத்ரார்த்தி புத்ரலாபம் ச தனார்த்தி லபதே தனம் ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச தன தான்ய ஸுகாவஹம்' அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்.. பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது? "இதிதாம்னாம் ஸஹஸ்ராணி ஷண்முகஸ்ய ச நாரத ய: படேத் ஸ்ருணுயாத் வாபி பக்தி யுக்தேன சேதஸா ஸஸத்யோ முச்யதே பாபை: மனோ வாக்காய ஸம்பவை: ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம் ஸ்தைர்ய வீர்ய விவர்தனம் வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன் நியமேன ஜபத் ஸுதி:' அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும். 16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்!