அறுபடைவீடுகள் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

அறுபடைவீடுகள்

தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்,
  1. திருப்பரங்குன்றம்,
  2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்,
  3. திருவாவினன்குடி (எ) பழனி ,
  4. திருவேரகம் (எ) சுவாமிமலை,
  5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
  6. பழமுதிர்சோலை


பழனி


பழனி , முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் , சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்கததால் , முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாய் புராணங்களில் கூறப்படுகிறது இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது