கந்தன் திருவடி சரணம்: முருகன்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழனி முருகன் இரகசியம்

12:00 AM
பழனி முருகன் இரகசியம்

 பழனி முருகன் இரகசியம்


ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:


உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!  

இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை


கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!

பழனி முருகன் இரகசியம்


அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.


போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.


லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.


நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!


அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.


மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.


கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.  

இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது.


அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.


சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.


இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.


அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.


தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்  

பட்டதாகக் கூறப்படுகிறது.


கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.


கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.


மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.


அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.


இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.


இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.


அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

மூச்சும் காற்றும் மனிதனை இயக்கும் ரகசியம்

4:38 PM
மூச்சும் காற்றும்  மனிதனை இயக்கும் ரகசியம்




 

*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?


*" காற்றே கடவுள் "*

**********************


அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.


ஒரு நாழிகைக்கு *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம். மூச்சுப் பயிற்சியில் *" பூரகம் "* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *" கும்பகம் "* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *" ரேசகம்* " என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *"பூரணம் "*என்று பெயர்.


*" சீதாக்காயம் "*என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் " சுழிமுனை" என்து ஆகும்.


              நமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.


 இரண்டு நாசிகளிலும், *மூச்சுக் காற்று வந்தால் அதற்கு " சுழிமுனை "* என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா?


*உடலைச் கீங்காரித்தாய் !*

*உயிர்க்கு என்ன செய்தாய் ?*


மேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்

காற்று 16 அங்குலம்.


 மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.


               அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.


 இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.


நம்முள் சுவாசம் நடக்கும் அளவு


அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்


நடக்கும் போது             - 16 அங்குலம்


ஓடும் போது                  - 25 அங்குலம்


உறங்கும் போது          - 36 அங்குலம்


உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது


*சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்*


*11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்*


*10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்*


*9 அங்குலமாக குறைந்தால்  விவேகி ஆவான்*


*8 அங்குலமாக குறைந்தால்  தூர திருஷ்டி காண்பான்*


*7,அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*


*6,அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்*


*5, அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்*


*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*


*3,அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*


*2, அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்*


*1, அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்*


உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்


எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும்  என்பதைப் பற்றி காண்போம்


ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.


வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.


வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.


அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.


இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

 சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.


 - *சித்தர்களின் சுவடி பொக்கிஷங்களிருந்து சேகரிக்கப்பட்டவை.

முருகப்பெருமானை பற்றிய 40 ருசிகரமான தகவல்கள்

3:53 PM
முருகப்பெருமானை பற்றிய 40 ருசிகரமான தகவல்கள்
1. முருகனின் திருவுருவங்கள்:

 1, சக்திதரர், 
2. கந்த சுவாமி, 
3. தேவசேனாதிபதி, 
4. சுப்பிரமணியர், 
5. கஜவாகனர், 
6. சரவணபவர், 
7. கார்த்திகேயர், 
8. குமாரசுவாமி, 
9. சண்முகர், 
10. தாரகாரி, 
11. சேனாபதி, 
12. பிரமசாத்தர், 
13. வள்ளி கல்யாண சுந்தரர், 
14. பாலசுவாமி, 
15. கிரவுஞ்ச பதனர், 
16. சிகிவாகனர் எனப்படும்.*

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

 
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

9. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

10. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

11. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

12. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான திருப்புகழ் நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

13. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

14. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

15. முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

16. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

17. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

18. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

19. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

20. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

21. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

22. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

23. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

24. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

25. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

26. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

27. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

28. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

29. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

30. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

31. முருகனைப் போன்று கருப்பைப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

32. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

33. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

34. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

35. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

36. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

37. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

38. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

39. கந்தனுக்குரிய விரதங்கள்: 
1. வார விரதம், 
2. நட்சத்திர விரதம், 
3. திதி விரதம்.

40. முருகனின் மூலமந்திரம்
 ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

முருகா சரணம் 

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

5:20 PM
அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்
ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-

சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  
கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல 
கரிய வெற்றி உண்டாகும்.
ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ 
மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - 
என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - 
என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம்செல்வாக்குடன் கூடிய  வாழ்வு 
உண்டாகும்.

3.ஹணபவசர - 
என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - 
என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள்எதிரிகளால் வரும் துன்பங்கள் 
 நீங்கும்.

5.பவசரஹண - 
என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல்   ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - 
என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள்   யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  
கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ 
இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு 
வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,
பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் 
இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து 
அதில் முதல் கோணத்திலிருந்து  (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் 
ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி 
அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து 
அந்த விபூதியை அணிந்து வர  
விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால்   ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.

உதாரணமாக :-


சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்.

வேல்மாறல்_மகா_மந்திரம்

9:50 PM
வேல்மாறல்_மகா_மந்திரம்

வேலும்_மயிலும்_சேவலும்_துணை

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

4.  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். - திருத்தணியில்...

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்...

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

13.  பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்...

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் - திருத்தணியில்...

20.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் - திருத்தணியில்...

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் - திருத்தணியில்...

25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் - திருத்தணியில்...

26.  தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் - திருத்தணியில்...

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்...

28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். - திருத்தணியில்...

35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்..

41.  தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

42.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்..

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

45.  சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

49.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்..

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்..

60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்..

61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்..

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். - திருத்தணியில்..

வேலும் மயிலும் சேவலும் துணை