முருகன் அழைப்பு பாடல் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

முருகன் அழைப்பு பாடல்

என்னைய முருகையா உன் கையில வேலு
இது யாரு தந்த வேலு உங்க அம்மா தந்த வேலு (என்னையா)

சின்ன சின்ன மயிலும் ஏரி சீக்கிரமாய் வந்தருள்வாய் 
கந்தனையே பார்க்கும் போது முருகையா 
எங்கள் கவலையெல்லாம் தீர்ந்துவிடும் கந்தையா  (என்னையா)

பழனிமலை ஓரதிலே பக்தரெல்லாம் கூடிடுவோம் 
பாலகனை பார்க்கும் போது கந்தையா 
எங்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிடும் முருகையா (என்னையா)

பச்ச நல்ல மயிலும் ஏரி 
பாங்குடனே வந்தருள்வாய் 
பக்தரெல்லாம் பார்க்கும் போது கந்தையா
எங்கள் பசிகள் எல்லாம் தீர்ந்துவிடும் முருகையா  (என்னையா)

குற்றால அருவியிலே குளித்தாலும் தீராது
எங்கள் குமரனையே பார்க்கும் போது கந்தையா
எங்கள் குறைகளெல்லாம் தீர்ந்துவிடும் முருகையா (என்னையா)

கட்டசாமி குட்டசாமி
துளசிமாலை போட்ட சாமி
இந்த குழந்தை முகம் பார்க்கும் போது கந்தையா
எங்கள் குறைகளெல்லாம் தீர்ந்துவிடும் முருகையா (என்னையா)

உன் அழகை காட்சிதரும்
ஒயர்ந்ததொரு பழனிமலை
உன் முகத்தை பார்க்கும் போது கந்தையா
எங்கள் குறைகளெல்லாம் தீர்ந்துவிடும் முருகையா (என்னையா)

பால்குடமும் கும்பத்திலே
பஞ்சாமிர்தம் பழனிமலையிலே
பழமுதிர்சோலையிலே முருகையா
அங்கே பாடி ஆடி விளையாடிடனும் கந்தையா (என்னையா)