எதற்காக வருகிறது துன்பம்? - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

எதற்காக வருகிறது துன்பம்?



இடுக்கண் வருங்கால் நகுக அதனை
 அடுத்துஊர்வது அஃது ஒப்பதுஇல் 
                                  (திருக்குறள் -621)

இன்பம் வரும் போது அதை விரும்பி 
அதில் மூழ்கிவிடாமல்.. துன்பம் வரும் 
போது அது இயற்கை என ஏற்றுக் கொள்பவரை என்றும் துன்பம் நெருங்காது...

துன்பம் வரும் போது துன்பம் வந்து 
விட்டதே என்று வருந்துகிறோம். 

வந்தி வருந்தியதைப்  போல... 

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்ந்தார்ப் போல மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்த இறைவனால் வந்தி என்ற வயதான பெண்ணும் அருள் பெற்றாள்..

ஒரு நாள் வைகை கரை புரண்டு ஓடத் தொடங்கியது. வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று பாண்டிய மன்னன் கட்டளை இட்டான்.

வந்தி என்ற ஒரு மூதாட்டி மதுரையில் வாழ்ந்து வந்தாள். கணவனும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பிட்டு விற்று வாழ்ந்து வந்தாள்.. அவளுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது. 

சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன என்று இருப்பவள். வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவில்லை  என்றால் பாண்டிய மன்னன் தண்டிப்பானே.. அய்யகோ நான் என்ன செய்வேன் என்று வருந்துகிறாள். அவளுக்குத் தெரியாது.. இந்தத் துன்பம் தான் மிகப் பெரிய, கிடைத்தற்கரிய இறைவனை அவள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வரப் போகிறது என்று...

ஆகவே... துன்பம் வரும் போது துவண்டு  போகாதீர்கள். யாருக்குத் தெரியும் உங்கள் துன்பம் கூட வந்தியை போல உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என்று.

ஆதலால்.. 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே' 
என்று இருங்கள். துன்பத்தில் கிடந்து வருந்துபவர்களுக்கு  உங்களுக்கும் 
ஆறுதல் கிடைக்கும என்று மீண்டும் 
மீண்டும் நம்பிக்கையை ஊட்டுவது நம் இலக்கியங்கள். 

சாதாரண மனிதர்களுக்கும் 
இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது புராணங்களே.. இறைவன் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான் என்ற நம்பிக்கையைத் தருவது நம் இலக்கியங்களும், புராணங்களுமே..!

ஆகவே தினமும் காலை, மாலை இருவேளையும் சிவபுராணம் படியுங்கள்.
துன்பம் உங்களை விட்டு பறந்தோடிவிடும்..

எட்டுத்தோள்களையும்,
மூன்று கண்களையும் உடைய 
எம் இறைவா.. சிவபெருமானே..! 

மலையை ஒத்த பெரியோனே..! 

என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும், உன்னுடைய னவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ?

அங்ஙனமாக, இப்பொழுது ஒரு துன்பம், எனக்கு உண்டாகுமோ?  ஆதலின் எனக்கு 
நீ நன்மையே செய்வாய் எனினும், பிழை தீமை செய்வாய் எனினும் இத்தன்மைக்கு, தலைவன், நானோ? யானோ? நீதானே எல்லாவற்றுக்கும் தலைவன்..?

ஓம் நமசிவாய..