நந்தி தேவர் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

நந்தி தேவர்

      லிங்கம் நந்தி  பலி பீடம் ஆகியவையே சிவாலயம் என்று ஆகமம் கூறுகிறது.  

         முந்தை நிகழ் கோயிலுக்கு முதற்பெரு நாயகம்ஆகி இந்திரன் மால் அயன் முதலாம்  இமையவர்க்கு நெறி அருளும் நந்தி   (சேக்கிழார்)         என அரி அயன் இந்திரன் அம்மன்கள்   பிள்ளையார் முருகன் முதலிய யாராக இருந்தாலும் நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகே அதாவது நந்தியை வணங்கிய பிறகே கோயிலுக்கு உள்ளே நுழைந்து சிவ பூசை செய்ய வேண்டும். நந்தி சிவகணத் தலைவர்.   சிவ வாகனம் .   கோயில் காவலராக உள்ள அதிகாரம் பெற்றவர்.                                                                                                                                               முந்தை மாதவப் பெறு முதன்மையால் மகிழ்ந்தே  நந்தி எம்பிரான் நடு விடையாடி முன் நணுக 

        மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்  (பெரிய புராணம்) 

   என  தவமும்   சிவ  பூசையும் புரிந்து பரம்பொருளின்  வாகனமாகி, 

சாரூப முக்தி அடைந்துத் திருக் கரங்களில் மானும் மழுவும் தாங்கும் இறை வடிவத்தைப் பெற்றுச் சிவலோகத்தில் சிவ கணங்களுக்கெல்லாம் தலைமையாய்த் திகழ்பவர்  தரும தேவரான  நந்தி தேவர்.

      


மலர்க் கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்  காப்பது அக் கயிலை மால் வரைதான்       (பெரிய புராணம்)

      உந்தி நின்றார் உன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்  துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் வந்து நின்றார் அயனும் திருமாலும்                   (அப்பர்) 

         அண்ணலார் கயிலையினில் முந்தை நிகழ் கோயிலுக்கு  முதல் பெரு நாயகமாகி இந்திரன் மால் அயன் முதலாம்  இமையவர்க்கு நெறி அருளும் நந்தி   (பெரிய புராணம்)

          அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு  அமரர் நறுமுறு தேவர் கணங்கள்  எல்லாம் நம்மின் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் 

             சத்தியும் சோமியும் பார்மகளும் நா மகளோடு பல்லாண்டு இசைமின்   சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்  கங்கையும்  வந்து கவரி கொள்மின்     (திருவாசகம்) 

       என  அரி அயன் சக்தி  முதலிய  ஆண் பெண்  தெய்வங்கள்  எல்லோருக்கும் முன்பாக முதல் பூஜை  புரியும் உரிமை பெற்றுக்  கையில் சுரிகையும் பிரம்பும் தாங்கி பிரம்மன் விஷ்ணு சக்தி லட்சுமி  சரசுவதி பூமாதேவி  இந்திரன்  முதலிய  வானவர்களை  யெல்லாம்  சிவ பூஜை செய்ய  வழி விடுபவர்   வழிகாட்டுபவர் நந்தி.  அவர் அனுமதி இல்லாமல்  அனுமதி பெறாமல்  அதாவது அவரை வணங்காமல் கோயிலுக்குள்  பூசை செய்ய முடியாது.  செய்தால் பலன் இல்லை. பாவமே.  எத்தனைக் கோபுர வாசல் இருந்தாலும்   எந்த  வாசல் வழியாக நுழைந்தாலும் திருமூலட்டான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே உள்ள  கோபுர வாசல் (ராஜ கோபுரம்) அருகே உள்ள  நந்தியை வணங்கி  அனுமதி பெற்ற பிறகே உள்ளே சென்று வழிபட  வேண்டும் .  தற்காலத்தில்  அஞ்ஞான ஆலய நிர்வாகங்கள் நந்திக்கும் முன்பாக  கொடி மரத்திற்கும் முன்பாகப் பிள்ளையார்  உருவமும்   மனம் போனபடி பல்வேறு சந்நிதிகளும்  அமைத்துப்  பாவம் புரிகின்றன.  அது மட்டுமன்றி   ⚛எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க   கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க  (திருவாசகம்)   என ஈசன் பணி தவிர வேறு எதுவும் செய்யாத  நந்தியின் மேல்  ஈசன் இல்லாமல்  பிறப்பு உள்ள ஜீவராசியான அம்மனை மட்டும் வைத்து  மிகக் கொடூரப் பாவம்  புரிகின்றனர்.    நந்தி தேவர்  சிவகணத் தலைவர். சிவ வடிவமும் சிவன் போல்  எட்டு குணமும்  கொண்டவர். ஆதலால் அவரை  ராவணன் மீனாட்சி பார்வதி உள்ளிட்ட  யாரும் தன் விருப்பப்படி  பார்க்க முடியாது . அவர் காட்சி கொடுத்தால் மட்டுமே  காண முடியும்.   நந்தி உருவமும்  முறைப்படி அமைக்கப்படுவதில்லை.  மாடுகளுக்குக் கண்கள் பக்கமாக இருப்பதால் முகம் சற்று திரும்பியிருந்தால் மட்டுமே ஒரு கண் பரம்பொருளை நோக்கியிருக்கும். இன்னொரு கண்   பக்தர்களுக்கு  அனுமதி வழங்கும்.  பொது அறிவும் இல்லாத, மரபும் அறியாத, திருமேனி அமைப்பு தெரியாத   அஞ்ஞான  ஆலய  நிர்வாகமும்  தபதிகளும் தற்காலத்தில்   நந்தி முகத்தை  நேராக வடித்து அவரை எங்கோ பார்க்கச் செய்து மகா பாவம் புரிகின்றனர்.  நந்தியைப் பார்த்தாலே அது பழைய  பல்லவர் சோழர்   நந்தியா  பாண்டியர் நந்தியா   தற்கால  சிவ விரோத அஞ்ஞானிகள்  வடித்ததா என்பது தெரியும்.   பாவி சோதிடர்கள் பத்திரிகைகள்  தொலைக்காட்சிகள் பின் சென்று  அப்பாவி மக்கள்  சிவாலயத்தில் சிவ பூசை செய்யாமல்,  சிவ சிந்தனை  இன்றி,  நந்தி அனுமதி இன்றி,  எல்லாம் வல்ல கடவுளைப் புறக்கணித்து அவமதித்து  நேரே  ராகு கேது   சனி  குரு நவகிரகம் பிள்ளையார் முருகன்  யமன்  அந்த அம்மன் இந்த அம்மன் என்று ஓடி சிவ நிந்தனை  செய்து  மீளா  நரகத்தில்  மிக  வேகமாக விழுகின்றனர்.