வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்

 வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 



கன்னி பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் என, அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று இந்த வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ள நிலையில், இதனை எப்படி கடைபிடிப்பது, விரதம் எடுக்க உகர்ந்த நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.


அம்மனை கொண்டாட கூடிய மாதங்களில் உயர்ந்த மாதம் ஆடி. அப்படி பட்ட ஆடி மாதத்தில் கொண்டாட கூடிய விரதம் வரலட்சுமி நோம்பு. ஆடி மாத அம்மாவாசை முடிந்ததும் வளர்பிறை துவங்கும். இந்த வளர்பிறையில் பவுர்ணமிக்கு முன்னதாக துவங்கும், வெள்ளிக்கிழமையில் வருவது தான் வரலட்சுமி விரதம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ளது. 


வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக... காலை 9:15 முதல் 10:15 வரையிலும், மாலை 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரமாக உள்ளது. எனவே இந்த நேரங்களில் வரலட்சுமி விரதம் எடுக்க சிறந்த நேரம் ஆகும். அப்படி இல்லை என்றால், வீட்டில் விளக்கேற்றும், அந்தி சாயும் நேரத்தில் விரதத்தை எடுப்பது சிறந்தது. எந்த வீட்டில் வரலட்சுமி விரதம் எடுக்கப்படுகிறதோ, அந்த வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வருவதாகவும், வாசம் செய்வாள் என்பதும் ஐதீகம்.


மஹாலக்ஷ்மி ஒரு வீட்டில் வாசெய்கிறாள் என்றால், அந்த வீட்டில் உள்ள கஷ்டங்களை போக்கி சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், அனைத்து விதமான வளங்களையும் அள்ளித்தருவாள் என்கிறது புராணம். 


வரலட்சுமி விருத்தம் கடைபிடிக்க, முதல் நாளே... அதாவது வியாழ கிழமை அன்றே, வீட்டை சுத்தம் செய்து, சுவாமிக்கு தீபாரத்தை செய்ய கூடிய பாத்திரங்கள் மற்றும் சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து தயார் படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு விரதத்தையும் துவங்கும் முன்பு, விநாயக பெருமானை வாங்க வேண்டும். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்த தாம்பாளத்தில் கீழ் கோலமிட்டு, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். அதன் பின்னர், பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, போன்ற மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்பு, நெய்வேத்தியமாக தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற அனைத்தையும் தயார் செய்து வைத்து கொண்டு.


முதலில் வெளியில், கற்பூரத்தை வெளிப்பகுதியில் காட்டி வாசலில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வீட்டிற்குள் அழைத்து செல்லுங்கள். பின்னர் கலசத்தின் பக்கத்தில் அமர்ந்து அம்மன் துதியை கூறி பூஜைகள் செய்யுங்கள். மனம் உருகி அழைத்தாள் வராமலா இருப்பாள் மஹாலட்சுமி. வருவது மட்டும் இன்றி நீங்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பால். பிறகு வரலட்சுமியை வேண்டி நோம்பு கயிற்றை கும்பத்தின் மீது சாற்றி வேண்டிக்கொண்டு தீபாராதனை செய்யுங்கள். 


பின்னர் உங்கள் வீட்டில் மூத்த சுமங்கலிகள் இருந்தால் அவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து இந்த விரதத்தை முடித்து, நோம்பு கயிற்றை கையில் கட்டி கொள்ளுங்கள். இந்த விரதத்தை திருமணம் ஆனவர்கள் எடுப்பதால் அவர்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னி பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.


செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் ஆடி 20ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை (05.08.2022) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. 


வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.


பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

வரலட்சுமி விரதம்


பூஜைசெய்யும்முறை :

ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.


அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும். 


மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்கலபாயாசம கரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிவேதனம் :

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

பலன்கள் :

வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கல வாழ்க்கை