திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்

 முதியவராக வந்த சிவபெருமான்!


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி சிவபெருமான் கொடுத்த திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்



கடலூர் மாவட்டம், திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்


திருத்துறையூரில் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாக ஸ்ரீ சிஷ்ட குருநாதர் மற்றும் ஸ்ரீ சிவலோக நாயகி கோயில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தவ நெறி வேண்டிப் பெற்ற தலமாக இத்தலம் விளக்குகின்றது. திருவெண்ணைநல்லூரில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனார் காட்சி கொடுத்து, பித்தா என்று அடி எடுத்துத் தந்தார்.


பிறகு தன்னுடைய புகழை இவ்வுலகிற்குப் பரப்புவதற்கு ஆணையிட்டதையும் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் தவ நெறி வேண்டிய நிலையில் ஈசன் திருத்துறையூர் வா உனக்கு உபதேசம் செய்கின்றேன் என்று கூற சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனுடைய ஆணையின்படி திருத்துறையூர் நோக்கி வருகை தந்த சமயம் நாயனாரைச் சோதிக்க வேண்டிய இறைவன் மறைகிறார்.


இறைவனைக் காணாத நாயனார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது இறைவன் வயோதிக வடிவில் வந்து சுந்தரரைத் தடுத்து நிறுத்தி சுந்தரா எங்குச் செல்கின்றாய் என்று வினவ, இறைவனைத் தேடிச் செல்கின்றேன் என்று கூற உடனே அவர் திரும்பிப்பார் என்று சொல்லி மறைந்துவிட்டார்.


பிறகு கோபுரத்தில் ரிஷப ருடராக இறைவனும், இறைவியும் காட்சி அளித்தனர். நாயனார் தன் பாடலால் அவ்விடமே இறைவனைப் புகழ்கின்றார். இவ்வாலயம் நான்கு விதிகளுடன் மேற்கு நோக்கி விளங்குகின்றது. கோயிலுக்கு எதிரே தீர்த்த குலமும், கோயில் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அம்பாளின் சன்னதியும் வடக்கு நோக்கி காட்சி அளிப்பதைப் பார்க்கலாம்.


தென்மேற்கே உள்ள நர்த்தின விநாயகரை வழிபட்டு சுவாமியின் சன்னதியை அடையலாம். அர்த்தமண்டபம், மகா மண்டபம் திருப்பணியாகக் காட்சி தருகின்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரம், நந்தி, பலி பீடங்களும் காணப்படுகின்றன.


பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்...!

அருள்மிகு சிஸ்டகுருநாதேஸ்வரர் நம்மில் உள்ளங்களைக் கவரும் பெருமையாகக் கருவறையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் இராமனும், பீமனும் பூஜித்து அருள் பெற்ற சிவலிங்கம் காணப்படுகின்றது. கோயிலுக்கு எதிரே அருணந்தி சிவாச்சாரியாரின் முக்தி அடைந்த இடமும் உள்ளது. அருகில் இறைவன் தடுத்த இடத்தில் லிங்கத் திருமேனி வயோதிக வடிவில் வந்த இடமும், காயகற்பம் எனும் இடத்தில் ஒரு பெரிய லிங்க திருமேனியும் உள்ளது.


திருமணத் தடை, கல்வி சிறக்க, புத்திர பாக்கியம் கிட்டும் திருக்கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. பௌர்ணமி தினத்தன்று 16 முறை இவ்வாலயத்தின் மாட வீதியைப் பக்தர்கள் வலம் வருகின்றனர். மேலும் அமாவாசை, பிரதோஷம், சதுர்த்தி, அஷ்டமி, கந்தசஷ்டி, நவராத்திரி, குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, வைகாசி விசாகம், பிரம்மோற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது.