கந்தன் திருவடி சரணம்: பக்தி

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்

11:03 AM
வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்

 வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 



கன்னி பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் என, அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று இந்த வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ள நிலையில், இதனை எப்படி கடைபிடிப்பது, விரதம் எடுக்க உகர்ந்த நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.


அம்மனை கொண்டாட கூடிய மாதங்களில் உயர்ந்த மாதம் ஆடி. அப்படி பட்ட ஆடி மாதத்தில் கொண்டாட கூடிய விரதம் வரலட்சுமி நோம்பு. ஆடி மாத அம்மாவாசை முடிந்ததும் வளர்பிறை துவங்கும். இந்த வளர்பிறையில் பவுர்ணமிக்கு முன்னதாக துவங்கும், வெள்ளிக்கிழமையில் வருவது தான் வரலட்சுமி விரதம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ளது. 


வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக... காலை 9:15 முதல் 10:15 வரையிலும், மாலை 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரமாக உள்ளது. எனவே இந்த நேரங்களில் வரலட்சுமி விரதம் எடுக்க சிறந்த நேரம் ஆகும். அப்படி இல்லை என்றால், வீட்டில் விளக்கேற்றும், அந்தி சாயும் நேரத்தில் விரதத்தை எடுப்பது சிறந்தது. எந்த வீட்டில் வரலட்சுமி விரதம் எடுக்கப்படுகிறதோ, அந்த வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வருவதாகவும், வாசம் செய்வாள் என்பதும் ஐதீகம்.


மஹாலக்ஷ்மி ஒரு வீட்டில் வாசெய்கிறாள் என்றால், அந்த வீட்டில் உள்ள கஷ்டங்களை போக்கி சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், அனைத்து விதமான வளங்களையும் அள்ளித்தருவாள் என்கிறது புராணம். 


வரலட்சுமி விருத்தம் கடைபிடிக்க, முதல் நாளே... அதாவது வியாழ கிழமை அன்றே, வீட்டை சுத்தம் செய்து, சுவாமிக்கு தீபாரத்தை செய்ய கூடிய பாத்திரங்கள் மற்றும் சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து தயார் படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு விரதத்தையும் துவங்கும் முன்பு, விநாயக பெருமானை வாங்க வேண்டும். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்த தாம்பாளத்தில் கீழ் கோலமிட்டு, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். அதன் பின்னர், பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, போன்ற மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்பு, நெய்வேத்தியமாக தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற அனைத்தையும் தயார் செய்து வைத்து கொண்டு.


முதலில் வெளியில், கற்பூரத்தை வெளிப்பகுதியில் காட்டி வாசலில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வீட்டிற்குள் அழைத்து செல்லுங்கள். பின்னர் கலசத்தின் பக்கத்தில் அமர்ந்து அம்மன் துதியை கூறி பூஜைகள் செய்யுங்கள். மனம் உருகி அழைத்தாள் வராமலா இருப்பாள் மஹாலட்சுமி. வருவது மட்டும் இன்றி நீங்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பால். பிறகு வரலட்சுமியை வேண்டி நோம்பு கயிற்றை கும்பத்தின் மீது சாற்றி வேண்டிக்கொண்டு தீபாராதனை செய்யுங்கள். 


பின்னர் உங்கள் வீட்டில் மூத்த சுமங்கலிகள் இருந்தால் அவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து இந்த விரதத்தை முடித்து, நோம்பு கயிற்றை கையில் கட்டி கொள்ளுங்கள். இந்த விரதத்தை திருமணம் ஆனவர்கள் எடுப்பதால் அவர்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னி பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.


செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் ஆடி 20ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை (05.08.2022) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. 


வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.


பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

வரலட்சுமி விரதம்


பூஜைசெய்யும்முறை :

ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.


அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும். 


மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்கலபாயாசம கரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிவேதனம் :

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

பலன்கள் :

வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கல வாழ்க்கை 

நந்தி தேவர்

6:45 PM
நந்தி தேவர்

      லிங்கம் நந்தி  பலி பீடம் ஆகியவையே சிவாலயம் என்று ஆகமம் கூறுகிறது.  

         முந்தை நிகழ் கோயிலுக்கு முதற்பெரு நாயகம்ஆகி இந்திரன் மால் அயன் முதலாம்  இமையவர்க்கு நெறி அருளும் நந்தி   (சேக்கிழார்)         என அரி அயன் இந்திரன் அம்மன்கள்   பிள்ளையார் முருகன் முதலிய யாராக இருந்தாலும் நந்தியிடம் அனுமதி பெற்ற பிறகே அதாவது நந்தியை வணங்கிய பிறகே கோயிலுக்கு உள்ளே நுழைந்து சிவ பூசை செய்ய வேண்டும். நந்தி சிவகணத் தலைவர்.   சிவ வாகனம் .   கோயில் காவலராக உள்ள அதிகாரம் பெற்றவர்.                                                                                                                                               முந்தை மாதவப் பெறு முதன்மையால் மகிழ்ந்தே  நந்தி எம்பிரான் நடு விடையாடி முன் நணுக 

        மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்  (பெரிய புராணம்) 

   என  தவமும்   சிவ  பூசையும் புரிந்து பரம்பொருளின்  வாகனமாகி, 

சாரூப முக்தி அடைந்துத் திருக் கரங்களில் மானும் மழுவும் தாங்கும் இறை வடிவத்தைப் பெற்றுச் சிவலோகத்தில் சிவ கணங்களுக்கெல்லாம் தலைமையாய்த் திகழ்பவர்  தரும தேவரான  நந்தி தேவர்.

      


மலர்க் கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்  காப்பது அக் கயிலை மால் வரைதான்       (பெரிய புராணம்)

      உந்தி நின்றார் உன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்  துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் வந்து நின்றார் அயனும் திருமாலும்                   (அப்பர்) 

         அண்ணலார் கயிலையினில் முந்தை நிகழ் கோயிலுக்கு  முதல் பெரு நாயகமாகி இந்திரன் மால் அயன் முதலாம்  இமையவர்க்கு நெறி அருளும் நந்தி   (பெரிய புராணம்)

          அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு  அமரர் நறுமுறு தேவர் கணங்கள்  எல்லாம் நம்மின் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் 

             சத்தியும் சோமியும் பார்மகளும் நா மகளோடு பல்லாண்டு இசைமின்   சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்  கங்கையும்  வந்து கவரி கொள்மின்     (திருவாசகம்) 

       என  அரி அயன் சக்தி  முதலிய  ஆண் பெண்  தெய்வங்கள்  எல்லோருக்கும் முன்பாக முதல் பூஜை  புரியும் உரிமை பெற்றுக்  கையில் சுரிகையும் பிரம்பும் தாங்கி பிரம்மன் விஷ்ணு சக்தி லட்சுமி  சரசுவதி பூமாதேவி  இந்திரன்  முதலிய  வானவர்களை  யெல்லாம்  சிவ பூஜை செய்ய  வழி விடுபவர்   வழிகாட்டுபவர் நந்தி.  அவர் அனுமதி இல்லாமல்  அனுமதி பெறாமல்  அதாவது அவரை வணங்காமல் கோயிலுக்குள்  பூசை செய்ய முடியாது.  செய்தால் பலன் இல்லை. பாவமே.  எத்தனைக் கோபுர வாசல் இருந்தாலும்   எந்த  வாசல் வழியாக நுழைந்தாலும் திருமூலட்டான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே உள்ள  கோபுர வாசல் (ராஜ கோபுரம்) அருகே உள்ள  நந்தியை வணங்கி  அனுமதி பெற்ற பிறகே உள்ளே சென்று வழிபட  வேண்டும் .  தற்காலத்தில்  அஞ்ஞான ஆலய நிர்வாகங்கள் நந்திக்கும் முன்பாக  கொடி மரத்திற்கும் முன்பாகப் பிள்ளையார்  உருவமும்   மனம் போனபடி பல்வேறு சந்நிதிகளும்  அமைத்துப்  பாவம் புரிகின்றன.  அது மட்டுமன்றி   ⚛எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க   கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க  (திருவாசகம்)   என ஈசன் பணி தவிர வேறு எதுவும் செய்யாத  நந்தியின் மேல்  ஈசன் இல்லாமல்  பிறப்பு உள்ள ஜீவராசியான அம்மனை மட்டும் வைத்து  மிகக் கொடூரப் பாவம்  புரிகின்றனர்.    நந்தி தேவர்  சிவகணத் தலைவர். சிவ வடிவமும் சிவன் போல்  எட்டு குணமும்  கொண்டவர். ஆதலால் அவரை  ராவணன் மீனாட்சி பார்வதி உள்ளிட்ட  யாரும் தன் விருப்பப்படி  பார்க்க முடியாது . அவர் காட்சி கொடுத்தால் மட்டுமே  காண முடியும்.   நந்தி உருவமும்  முறைப்படி அமைக்கப்படுவதில்லை.  மாடுகளுக்குக் கண்கள் பக்கமாக இருப்பதால் முகம் சற்று திரும்பியிருந்தால் மட்டுமே ஒரு கண் பரம்பொருளை நோக்கியிருக்கும். இன்னொரு கண்   பக்தர்களுக்கு  அனுமதி வழங்கும்.  பொது அறிவும் இல்லாத, மரபும் அறியாத, திருமேனி அமைப்பு தெரியாத   அஞ்ஞான  ஆலய  நிர்வாகமும்  தபதிகளும் தற்காலத்தில்   நந்தி முகத்தை  நேராக வடித்து அவரை எங்கோ பார்க்கச் செய்து மகா பாவம் புரிகின்றனர்.  நந்தியைப் பார்த்தாலே அது பழைய  பல்லவர் சோழர்   நந்தியா  பாண்டியர் நந்தியா   தற்கால  சிவ விரோத அஞ்ஞானிகள்  வடித்ததா என்பது தெரியும்.   பாவி சோதிடர்கள் பத்திரிகைகள்  தொலைக்காட்சிகள் பின் சென்று  அப்பாவி மக்கள்  சிவாலயத்தில் சிவ பூசை செய்யாமல்,  சிவ சிந்தனை  இன்றி,  நந்தி அனுமதி இன்றி,  எல்லாம் வல்ல கடவுளைப் புறக்கணித்து அவமதித்து  நேரே  ராகு கேது   சனி  குரு நவகிரகம் பிள்ளையார் முருகன்  யமன்  அந்த அம்மன் இந்த அம்மன் என்று ஓடி சிவ நிந்தனை  செய்து  மீளா  நரகத்தில்  மிக  வேகமாக விழுகின்றனர்.  

கற்சிற்பம் கடவுளாவது எப்படி.?

5:04 PM
 கற்சிற்பம் கடவுளாவது எப்படி.?

ஆகம_சாஸ்திரத்தின்_அற்புதம்


கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.


கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். 


சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. 


அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். 


கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.



சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. 


அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். 


ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். 


இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். 


இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். 


அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.


48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். 


அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். 


இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். 


ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். 


பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். 


இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 


இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. 


எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.


சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 


நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். 


தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். 


அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். 


அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 


6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டைசெய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார். 


தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். 


இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். 


பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. 


புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். 


இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. 


தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. 


அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. 


பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. 


ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 


இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.


கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. 


அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. 


மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்.


ஓம்நமசிவாய போற்றி.......


காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்?

1:51 PM
காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்?

பொதுவாக அனைவரின் வீட்டிலும் காமாட்சி விளக்கை நாம் காண முடியும். ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது? என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் கடும் தவம் புரிந்தார். அப்போது சகலதெய்வங்களும் காமாட்சி அம்மனுள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
காமாட்சி அம்மனுக்குள் சகலதெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும், குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி தீபம் என பெயர் ஏற்பட்டது.

அனைத்து தெய்வங்களின் அருளை ஒன்றாக பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வலம் வருகின்றனர். புகுந்த வீட்டில் முதன்முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம்.

அதனோடு, குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

மங்களப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்களத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.

பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்கு சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியப்படி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி, முன்னால் பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே.

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

1:47 PM
இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு.

மறுநாள்.. ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு அவை ஒரே மாதிரி இருந்தன

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு மாணவர்கள் ஒரு கணம் கழித்து "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்" என்றார்கள்..

"இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்கிறார். மாணவர்கள், "தெரியவில்லை!" என்று பதிலறக்கிறார்கள்.

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது" என்ற குரு, முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது. . 

இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்காத வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. . நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்" என்றார் குரு.

மேலும் மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: "மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்றார்.
மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான!" என்றார்கள். .

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?

சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே! அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள.

*"நம்மை நாம் அறிந்துகொண்டால் தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்!"*

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்

1:27 AM
சூரிய பகவான் காயத்ரி மந்திரம்
சூரிய நமஸ்காரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.

இன்றைய  திதி நித்யா காயத்ரி மந்திரம்
 ஸ்ரீநித்யா
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே 
நித்யா நித்யாயை தீமஹி 
தன்னோ யோகிநி ப்ரசோதயாத். 

வழிபாடு பலன்கள்: 
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும். 

இன்றைய நட்சத்திர காயத்ரி மந்திரம்
பூரம் :

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம் :
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ:

எதற்காக வருகிறது துன்பம்?

1:33 PM
எதற்காக வருகிறது துன்பம்?


இடுக்கண் வருங்கால் நகுக அதனை
 அடுத்துஊர்வது அஃது ஒப்பதுஇல் 
                                  (திருக்குறள் -621)

இன்பம் வரும் போது அதை விரும்பி 
அதில் மூழ்கிவிடாமல்.. துன்பம் வரும் 
போது அது இயற்கை என ஏற்றுக் கொள்பவரை என்றும் துன்பம் நெருங்காது...

துன்பம் வரும் போது துன்பம் வந்து 
விட்டதே என்று வருந்துகிறோம். 

வந்தி வருந்தியதைப்  போல... 

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்ந்தார்ப் போல மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்த இறைவனால் வந்தி என்ற வயதான பெண்ணும் அருள் பெற்றாள்..

ஒரு நாள் வைகை கரை புரண்டு ஓடத் தொடங்கியது. வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று பாண்டிய மன்னன் கட்டளை இட்டான்.

வந்தி என்ற ஒரு மூதாட்டி மதுரையில் வாழ்ந்து வந்தாள். கணவனும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பிட்டு விற்று வாழ்ந்து வந்தாள்.. அவளுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது. 

சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன என்று இருப்பவள். வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவில்லை  என்றால் பாண்டிய மன்னன் தண்டிப்பானே.. அய்யகோ நான் என்ன செய்வேன் என்று வருந்துகிறாள். அவளுக்குத் தெரியாது.. இந்தத் துன்பம் தான் மிகப் பெரிய, கிடைத்தற்கரிய இறைவனை அவள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வரப் போகிறது என்று...

ஆகவே... துன்பம் வரும் போது துவண்டு  போகாதீர்கள். யாருக்குத் தெரியும் உங்கள் துன்பம் கூட வந்தியை போல உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என்று.

ஆதலால்.. 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே' 
என்று இருங்கள். துன்பத்தில் கிடந்து வருந்துபவர்களுக்கு  உங்களுக்கும் 
ஆறுதல் கிடைக்கும என்று மீண்டும் 
மீண்டும் நம்பிக்கையை ஊட்டுவது நம் இலக்கியங்கள். 

சாதாரண மனிதர்களுக்கும் 
இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது புராணங்களே.. இறைவன் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான் என்ற நம்பிக்கையைத் தருவது நம் இலக்கியங்களும், புராணங்களுமே..!

ஆகவே தினமும் காலை, மாலை இருவேளையும் சிவபுராணம் படியுங்கள்.
துன்பம் உங்களை விட்டு பறந்தோடிவிடும்..

எட்டுத்தோள்களையும்,
மூன்று கண்களையும் உடைய 
எம் இறைவா.. சிவபெருமானே..! 

மலையை ஒத்த பெரியோனே..! 

என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும், உன்னுடைய னவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ?

அங்ஙனமாக, இப்பொழுது ஒரு துன்பம், எனக்கு உண்டாகுமோ?  ஆதலின் எனக்கு 
நீ நன்மையே செய்வாய் எனினும், பிழை தீமை செய்வாய் எனினும் இத்தன்மைக்கு, தலைவன், நானோ? யானோ? நீதானே எல்லாவற்றுக்கும் தலைவன்..?

ஓம் நமசிவாய..